லண்டன் சென்றுள்ள சந்திரிகா நாடு திரும்பியதும் முடிவு

Chandrika9.img_assist_custom[1]கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான அரசியல் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு அவர் லண்டன் சென்றிருப்பதாக அவருடைய ஊடகச் செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுகிய லண்டன் விஜயத்தை மேற் கொண்டு நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியலில் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெளிவுபடுத்துவார் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.முவில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க தொடர்ச்சியாக எதிர்ப்புக் காட்டிவந்தார். இந்நிலையில் வேட்பாளர் பத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் நேற்று ஐ.ம.சு.மு. வேட்பாளர் பத்திரத்தில் கைச்சாத் திட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு வருடத்துக்கு முன்னர் திட்டமிட்ட நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் தானும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சந்திரிகா குமாரதுங்க சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். லண்டன் சென்று திரும்பியதும் அவருடைய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment