09 ஆவது மாடியிலிருந்து விழுந்த இலங்கை பெண் உயிரிழப்பு

bahrainமனாமா: பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான குடியிருப்பில் 9ஆவது மாடியிலிருந்து தவறிவீழ்ந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 23 வயதுடைய குடாலியனகே டொனா நிமேஷா உதாரி குணசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளாஸ் பிளாசா நகரிலுள்ள யுபீர் என்ற பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான குடியிருப்புத் தொகுதியில் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவரே மேல் மாடியிலிருந்து தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மது அருந்திவிட்டு போதையில் தடுமாறிய நிலையிலேயே மாடியிருந்து வீழ்ந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பஹ்ரெய்ன் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாடியிலிருந்து தவறி வீழ்ந்த பெண்ணை பிடித்து இழுப்பதற்கு கடற்படையினர் முயற்சித்தபோது முயற்சி பயனளிக்கவில்லையெனத் தெரியவருகிறது. புனித ரமழான் மாதத்தில் மது அருந்துதல் பஹ்ரெய்னில் தடைசெய்யப்பட்டுள்ள போதும், அமெரிக்கர்கள் தமது தனிப்பட்ட வீடுகளில் மது அருந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில் அமெரிக்க கடற்படையின் குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதுவரை எவர் மீதும் சந்தேகம் ஏற்படவில்லையென்றும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் தெரியவருகிறது.

Published by

Leave a comment