விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு: 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

student labசிலாபம்: சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 03 மாணவர்கள் ஆரம்ப சிகிச்சை பிரிவிலும் இரண்டு மாணவர்கள் கண் சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் எந்த மாணவர்களுக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

student lab

அத்துடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடலில் இரசாயனத் துகள்கள் இருந்துள்ளது எனினும் இதனால் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment