முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு பெருநாளுக்கு முன்னர் சம்பளம் வழங்க கோரிக்கை

money-wallet-icon[1]கொழும்பு: முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாக ஜுலை மாத சம்பளத்தை வழங்குமாறு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நிதி அமைச்சை கோரியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சருக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ள தொழிற்சங்க மத்திய நிலையம், ரமழான் பண்டிகைக்கு தயாராகி வரும் அரசாங்க ஊழியர்களை

பொருளாதார ரீதியில் உதவுவதற்காக ஜுலை மாத சம்பளத்தை முன்கூட்டி வழங்குமாறு கேட்டுள்ளது.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் செயற்படுவதால் பெருநாள் பண்டிகையை கொண்டாட தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Published by

Leave a comment