கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக வேட்புரிமை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்தது யார் தொடர்பான தகவல்கள் வெளியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் விரும்பி மகிந்தவுக்கு வேட்புரிமையை வழங்கியிருப்பார் என்பது சந்தேகத்திற்குரியது.
ஜனாதிபதி பதவிக்கு தான் வருவதற்கு உதவி சந்திரிக்கா, ரணில் விக்ரமசிங்க தரப்பும், சோபித தேரர் உட்பட வெகு ஜன அமைப்புகளும் மக்கள் விடுதலை முன்னணியும் மகிந்த ராஜபக்சவை இணைத்து கொள்வது தொடர்பில் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தன.
எனினும் இந்த அழுத்தங்களை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கொடுக்கப்பட்ட மிகவும் பாரதூரமான அழுத்தமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இலங்கையின் அரசியலில் தொடர்ந்தும் தீர்மானகரமான தலையீடுகளை மேற்கொள்ளும் அயல் நாடான இந்தியா, மைத்திரிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் பின்னணியில் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பான “றோ” நேரடியான தலையீடுகளை மேற்கொண்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தியா அழுத்தங்களை கொடுப்பதற்கு கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியாவுக்கு மகிந்தவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது சுலபமானது. அத்துடன் சீனாவுடன் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கும் தொடர்புகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியான நன்மையை ஏற்படுத்திக்கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by

Leave a comment