* பாகிஸ்தான் அணி 2-வது இனிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான். ஆசிய மண்ணில் அரங்கேறிய 2-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும்.
* அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6-வது அதிகபட்ச சேசிங்காகும் இது பதிவானது. 2003-ம் ஆண்டில் செயின்ட்ஜன்சில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்தியதீவு அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ஓட்டங்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் உச்சகட்ட சேசிங்காக இருந்து வருகிறது.
* டெஸ்ட் போட்டியில் சேசிங் செய்யப்பட்ட ஆறாவது அதிகூடய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்
* யூனுஸ் கான் பெற்ற 171 ஓட்டமானது பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டஎண்ணிக்கை என்பது மட்டுமல்லாமல், கோட்டன் கிரின்டிங், ஆர்தர் மோரிஸ் ,டொன் பிரட்மேன் மற்றும் மார்க் பௌச்சர் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
* 2006-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். ஒன்பது வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
* பல்லேகலவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முடிவு தெரிந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இங்கு நடந்த 3 டெஸ்ட் போட்டிகளும் சம (Draw) நிலையிலேயே முடிந்துள்ளன.
* தரிந்நு கௌசால் இந்த டெஸ்ட் போட்டியில் 4.9 வீதம் பந்நு வீசியுள்ளார்.
* இலங்கை வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகக்குறைந்தது 20 ஓவர்கள் மாத்திரம் பந்து வீசியுள்ளனர்.
* 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற 11 வது வீரராக யூனுஸ் கான் திகழ்கிறார்.
Published by

Leave a comment