கொழும்பு: பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணியில் மிலின்ட சிறிவர்தனா மற்றும் சசித் பதிரணா என்ற இரு இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலிந்த சிறிவர்தன 19 முதற்தர போட்டிகளில் விளையாடி 1144 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை சசித் பதிரண உள்ளூர் போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன் இலங்கை அணியின் மூத்த வீரர்களான ரங்கண ஹேரத், கௌசால், நுவான் குலசேகர, மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் வருமாறு
அஞ்சலோ மெத்திவ்ஸ்(தலைவர்), திலகரத்ன டில்சான் , குசால் பெரேரா, உப்புல் தரங்க, லஹிரு திரிமான்ன, தினேஸ் சந்திமால், மலிந்த சிறி வர்தன, அசான்; பிரியஞ்சன் ,சுவான் பிரதீப், திஸரபெரேரா, சுரங்க லக் மால், லசித் மாலிங்க, சசிந்திர சேன நாயக்க, சீகுககே பிரசன்ன, சசித் பத்திரன
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர் வரும் 11 ஆம் திகதி தம்புள்ளவில் நடைபெறவுள்ளது.
Published by
![SRI LANKA CRICKET LOGO[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/sri-lanka-cricket-logo1.jpg?w=150&h=150)
Leave a comment