மொசூல்: ஈராக்கின் மொசுல் நகரில் இஃப்தார் நிகழ்ச்சியின்போது 145 ஐ.எஸ். தீவிரவாதிகள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டதில் 45 பேர் பலியாகினர். ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசுல் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளில் சிலர் நோன்பு வைத்து வருகிறார்கள்.
ஈராக் மற்றும் சிரியாவில் நோன்பு வைக்காதவர்களை பிடித்து தீவிரவாதிகள் தூக்கிலிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மொசுல் நகரில் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். அப்போது 145 தீவிரவாதிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் 45 தீவிரவாதிகள் பலியாகினர்.இந்த தகவலை ஈராக் மற்றும் குர்திஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் சிரியாவைச் சேர்ந்த போராளி ஒருவர் சமையல் கலைஞர் போன்று வேடமிட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாமுக்குள் புகுந்து பலருக்கு விஷம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment