அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் உதவியால் நாம் இன்று ரமழானின் இறுதிப்பத்தை அடைந்துள்ளோம். இப்புனித மாத இறுதியின் நல்லமல்களுக்காகவும், புனித “லைலதுல் கத்ர்” இரவை அடைந்துகொள்ளும் நோக்குடனும் நாள்தோரும் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் தொடர்ந்து செய்திகளைப் பதிவேற்றிவரும் எமது “யுவர்காத்தான்குடி” இணையத்தளத்தின் செய்திப் பதிவேற்றம், இன்றுடன் மட்டுப்படுத்தப்படுகிறது.
இதன்காரணமாக செய்திகளை உடனுக்குடன் அனுப்பி வைக்கும் அன்பு ஊடகவியலாளர்கள் மற்றும் தினந்தோரும் உலகெங்கிலும் இருந்து எமது தளத்துக்கு வருகைதரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஆகியோருக்கும் ஏற்படும் சங்கடங்களுக்கு வருந்துகிறோம்.
இருந்தும், பகுதி நேர எமது இயக்குனர்களால் பிரதான செய்திகள் அவ்வப்போது தொடர்ந்தும் பதிவேற்றப்படும் என்பதையும், எமது வழமையான சேவை இன்ஷா அல்லாஹ் நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து இயங்கும் என்பதையும் மேலும் அறியத்தருகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இப்புனித ரமழானில் எங்களது நல்லமல்களை ஏற்றுக் கொள்ளவும், புனித லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ளவும் எங்களுக்கு அருள்பாளிப்பானாக!
நன்றி,
இயக்குனர்
YOURKATTANKUDY

Leave a comment