றஊப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்யவேண்டும்

காதத்தான்குடி முன்னால் நகர சபை தலைவர் மர்சூக் அகமது லெவ்வை எழுதிய மடல்

Marzook– ஏ.எல்.டீன்பைரூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது. இதனை கட்சியின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் சென்ற 02ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

இதனை ஏறக்குறைய கட்சியின் உயர்பீடமும் அங்கிகரித்திருந்தது. இது ஒரு நல்ல தீர்மானம். ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை பெற்று பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளப்போகின்றது.

முஸ்லிம்களும் மகிந்தவின் அரசாங்கத்தைவிட ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில்தான் தங்களுக்கு பாதுகாப்பு கூட என்பதை இன்று உணர்ந்திருக்கின்றார்கள்.

மேலும் 19வது அரசியல் திருத்தம் முழுமையாக வெற்றிபெறவேண்டுமாயிருந்தால், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் மாத்திரமே முடியும். ஏனெனில் சின்ன ஒரு உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். 19 வது திருத்தத்தின்படி அரசியல் அமைப்பு சபை இதுவரை நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சபையிலே 07 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களும் 03 பேர் பொது மக்களில் இருந்தும் தெரிவு செய்யப்படவேண்டும்.

இருவாறு 07 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்;த போதும் 03 பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டியவர்களை இதுவரை தெரிவு செய்யாமல் பொதுசன ஐக்கிய முன்னணியினர், தங்களுக்குள்ள பாராளுமன்ற பலத்தை வைத்து இழுத்தடிப்பு செய்துவருவதால் இச்சபையை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நாட்டில் 19வது திருத்தம் வெற்றி பெற ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதே சிறந்ததாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதால் தன்னுடைய நோக்கங்களை அடைந்துகொள்ள முடியுமா? என்ற விடயத்தை நாங்கள் ஆளமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கேட்பதால் முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தளவு சாதகமான சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதை பார்ப்போம். மட்டக்களப்பு மாவட்டத்திலே முஸ்லிம் மக்களின் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து கேட்டால் நிச்சமாக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கேட்பதால் முஸ்லிம் காங்கிரஸ்pற்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் அமீர் அலி களமிறங்க உள்ளார். அமீர் அலி கல்குடா தொகுதியில் ஒரு ஜாம்பவானாக பார்க்கப்படுபவர். இவர் சாதாரணமாகவே பத்தாயிரம் வாக்குகள் எடுக்ககூடிய கொள் திறனுள்ளவர். ஆனால் தற்போது முஸ்லிம் காங்கிரஸில் கலமிறங்குகின்ற வேட்பாளர்களை பார்க்கும் போது சாதாரணமாக பத்தாயிரம் வாக்குகள் கொள்திறன் வேட்பாளர்கள் யாருமில்லை. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் முதுகில் ஏறி இலகுவாக அமீர் அலி வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பமே உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெரும் கட்சிகள் ஒன்று சேர்வதால் மாவட்டத்திலே இரண்டு ஆசனங்களை பெற்றால் மாத்திரம்தான் முஸ்லிம் காங்கிரஸிற்குரிய பிரதி நிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும்இ ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்கின்றதா என்றால் இல்லை என்ற பதிலே கடந்த கால அனுபவத்தை கொண்டு கிடைக்கும். 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலே முஸ்லிம் காங்கிரஸ் நுஆ சின்னத்திலே தமிழர்களை இணைத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கியது.

அதிலே மட்டக்களப்பிலே முடிசூடா மன்னாக இருந்த செல்லைய்யா இராஜதுரைஇ புலி என்று சொல்லி கண்டி போகம்பர சிறையிலே இருந்த அகிலேஸ்வரன் போன்ற தமிழர்களோடு மர்ஹும் முகைதீன் அப்துல் காதர், ஹிஸ்புல்லாஹ் போன்ற படையப்பாக்களும் களமிறங்கிய தேர்தலது.

இவர்கள் மாவட்டத்தில் 03 அல்லது 02 ஆசனங்களை பெறலாம் என எதிர்பார்த்தார்கள். இவர்கள் 53000 வாக்குகளை தேர்தலிலே பெற்றார்கள். ஆனால் தமிழர் கூட்டமைப்பு 54000 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களை பெற்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் 53000 வாக்குகளை பெற்றும் 01 ஆசனத்தையே பெற்றது. சாதாரணமாக 16000 வாக்குகளை பெற்று பொதுசன ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிட்ட கணேச மூர்த்தி வெற்றி பெற்றார். முஸ்லிம் காங்கிரஸிலே மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் வென்றார். சாதாரணமாக 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 03 ஆசனங்களை இழந்ததுடன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் 02 ஆசனங்கள் பெறும் சந்தர்ப்பத்தையும் இழந்து ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எடுத்துக்கொண்டால்இ பொதுசன ஐக்கிய முன்னணி மாவட்டத்தில் 03 ஆசனங்களை பெறும் கனவுடன் களமிறங்கியது. தரமான வேட்பாளர்களோடு பொதுசன ஐக்கிய முன்னணி களமிறங்கியது. இவர்களின் பட்டியலிலே முன்னாள்இ இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் களமிறக்கப்பட்டார்கள்.

இதற்காக வேண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலான அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார். இதே போலே பிரதி அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி லண்டனிலே இருந்து தருவிக்கப்பட்டு களமிக்கப்பட்டார்.

இவர்களோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ்வும், பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியும் களமிறக்கப்பட்டனர். இந்த கூட்டணியும் 62000 வாக்குகளை பெற்றது. இருந்தும் மாவட்டத்தை வெற்றி கொண்டு 03 ஆசனங்களைபெறமுடியவில்லை.

ஏனெனில் தமிழ் கூட்டமைப்பு 66000 வாக்குகளைப்பெற்று 03 ஆசனங்களை பெற்றது. பொதுசன ஐக்கிய முன்னணி 4000 வாக்கு வித்தியாசத்தில் 03 ஆசனங்களை பெறும் சந்தர்ப்பத்தை இழந்ததுடன் 1500 வாக்கு வித்தியாசயத்தில் 02 ஆசனங்களை பெறும் சந்தர்ப்பத்தை இழந்து வெறும் 1 ஆசனத்தையே வென்றது. இதிலே ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். இதிலே 22000 சொற்ப வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனம் கிடைத்து பஷீர் சேகுதாவூத் பாராளுமன்றம் சென்றார். இவ்வாறு தேர்தல் வராலாற்றை தூக்கி பார்க்கின்ற போது இந்த கூட்டணியினால் இரண்டு ஆசனங்களை பெறமுடியவில்லை.

எனவே ஐக்கிய தேசிய கட்சிஇ முஸ்லிம் காங்கிரஸ்இ அகில இலங்கை முஸ்லிம காங்கிரஸ் என்ற இந்த கூட்டினால் 02 ஆசனங்களை மட்டக்களப்பிலே பெறும் சாத்தியம் மிகவும் அரிதாகவே உள்ளது. இவ்வாறு சேர்ந்து கேட்பதினால் அமீர் அலி வெற்றி பெறுவது மாத்திரமல்ல மைத்திரியின் அணியில் இணைந்தோ அல்லது சுயட்சேயாக களமிறங்க இருக்கின்ற ஹிஸ்புல்லாஹ்வும் சொற்ப வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இதுவும் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆபத்தான விடயமாகும். ஏன் என்றால் மறைந்த மாபெரும் தலைவர் அஸ்ரப் உடைய காலத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்பதாக இருந்தால் அந்த கட்சியினால் அந்த மாவட்டத்தில் வேறு எந்த முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தக்கூடாது என்ற நிபந்தனையை விதிக்கும். முஸ்லிம் வேட்பாளரை நியமிக்கின்ற தனி உரிமையை முஸ்லிம் காங்கிரசே பெற்றுக்கொள்ளும். இதே நடைமுறையில் தான் தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீம் பின்பற்றி வந்தார். ஏன் என்றால் ஆளும் அரசாங்கத்திலே முஸ்லிம் காங்கிரஸே முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். இது ஒரு வகையில் நியாயமும்தான்.

ஏனெனில் முஸ்லிம்களின் அதிக நம்பிக்கையை பெற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்வதால் அரசாங்கத்தின் ஏக உரிமையும் தனக்கே இருக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்ப்பது இயற்கை. எதிரிகளான மற்ற முஸ்லிம் பிரதி நிதிகள் கோடரி காம்புபோல் இருந்து கொண்டு தங்களுக்கு தொல்லை தருவதை இவர்கள் விரும்புவதில்லை.

எனவே முஸ்லிம் காங்கிரஸின் கொள்கையின் படி அமீர் அலியோ ஹிஸ்புல்லாஹ்வோ வெற்றி பெறுவதை விரும்பப்போவதில்லை.

ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தவரை கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்திருந்த போதிலும் இவர் மாத்திரம் மகிந்தவை ஆதரித்து நின்று இவ்வளவு சீரழிவுக்கும் உள்ளானார். இவர் தற்போது மைத்திரி அணியில் களமிறங்குவதாக அறிவித்திருக்கின்றார். தற்போது கிடைக்கும் தகவலின் படி மைத்திரி அணியானது மகிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பதன் மூலம் மகிந்த அணியாக மாறிவருகின்றது.

ஹிஸ்புல்லாஹ் மகிந்த அணியில் மீண்டும் போட்டியிட்டால் இவருக்கு மக்கள் என்ன பதில் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்கவேண்டும். இது மாத்திரமல்ல ஹிஸ்புல்லாஹ் எதிர்கால சிலை வணக்கத்திற்கு காத்தான்குடி மக்களை தூண்டிய குற்றத்திற்காக காத்தான்குடி மக்களும் தஃவா அமைப்புகளும் இவருக்கு இந்த தேர்தலில் என்ன பதில் கொடுப்பார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து கேட்பதனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு 02 வேட்பாளர்களை நியமிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. அதே போல அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் 2 வேட்பாளர்களை நியமிக்க முடியும் எனப்படுகின்றது. அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸிற்கு 2 வேட்பாளர்கள் மாத்திரம் கிடைத்தால் அதனை ஓட்டமாவடிக்கும் ஏறாவூருக்கும் வழங்குவது என்றும். காத்தான்குடிக்கு வேட்பாளர்கள் கொடுப்பதில்லை எனவும் கட்சி தீர்மானத்திற்கு வரவேண்டிய நிர்பந்தம் வரலாம். இவ்வாறான ஒரு நிலமை வந்தால் இது ஹிஸ்புல்லாஹ்விற்கு சாதகமாகவே அமையும். இதனை தடுக்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீனையோஇ இந்நாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி இன்ஜினியரையோ கட்சி வேட்பாளராக கட்டாயம் நியமிக்க வேண்டும். அமீர் அலியும் காத்தான்குடியில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க கூடிய ஒரு நல்ல வேட்பாளரை தேடித்திரிகின்றார்.

மேலும் அமீர் அலியை விட விருப்பு வாக்குகள் கூடுதலாக எடுப்பதாக இருந்தால்இ ஒரு வேட்பாளரின் பெயர் அடையாளப்படுத்தப்பட்டு அவரின் இலக்கத்திற்கு கட்டாயம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். இது சாத்தியமில்லை ஓட்டமாவடி தனது ஊருக்கு எம்பி வேண்டும் என்று தீர்மானித்து றியாலுக்கு மாத்திரம் வாக்களிக்க முற்படுவார்கள். அதே போல் ஏறாவூரிலும் அலிஷாகிர் மௌலானாவிற்கு மாத்திரம் வாக்களிக்க முற்படுவார்கள். மேலும் ஒரு வேட்பாளரை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்பது என்பது கட்சித்தலமைக்கு சங்கடமான நிலமையை தோற்றுவிக்கும். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்ததாகும். அப்போதுதான் மாவட்டத்தில் உள்ள சகல முஸ்லிம் ஊர்களையும் சமப்படுத்தி வேட்பாளர்களை போதியளவு நிறுத்தமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. இந்த மாவட்டத்திலே கட்சிக்குள்ள சொற்ப வாக்குகளையும் வேட்;பாளர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கினால் பெறுகின்ற சொற்ப வாக்குகளையும் பெற்றுத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரதி நிதித்துவத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றது. கட்சி தனித்துக்கேட்டால் எந்த வேட்பாளரையும் அடையாளப்படுத்தி வாக்கு கேட்க வேண்டிய தேவையில்லை. கட்சிக்குள்லேயே யாருக்கு வாக்களித்திருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர்தான் தெரிவு செய்யப்படுவார்.

எனவே தலைவர் றஊப் ஹக்கீமும் ‘ஐக்கிய தேசிய கட்சியோடு ஏனைய மாவட்டங்களில் சேர்ந்து கேட்டாலும் மட்டக்களப்பு அம்பாறையை பொறுத்த வரை நாங்கள் பிரிந்து கேட்டால் உள்ள சாதக பாதக நிலைகளை அலசி ஆராய்ந்துஇ பிரிந்து கேட்பது என்பது முடிவாக இருந்தால் அந்த நியாயங்களை பிரதமர் ரணிலுக்கு விளங்கப்படுத்தி மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் தனித்து கேட்பதற்கான சந்தர்ப்பதையும் நாங்கள் ஏற்படுத்தலாம்’ என தலைவர் ரஊப் ஹக்கீம் கட்சியின் உயர்பீட கூட்டத்திலே தெரிவித்திருந்தார். எனவே மட்டக்களப்பை பொறுத்தவரை தனித்து கேட்கவேண்டிய நியாயத்தை ரணிலுக்கு விளங்கப்படுத்தி அவரது சம்மதத்தை பெற்று தனித்து கேட்பதே சாலச்சிறந்தது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இந்த பொது தேர்தலிலே போட்டியிடுவதாக பரவலாக செய்தி அடிபடுகின்றது. தற்பொழுது மட்டக்களப்பு மாவட்ட நிலவரத்தை பார்க்கின்ற பொழுது ஹாபிஸ் நஸீர் அஹமட் இந்த தேர்தலிலே போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸ்; பிரதி நிதித்துவத்தை காப்பாற்றுவது என்பது ஒரு சிறந்த தீர்மானமாகவே படுகின்றது. ஏனெனில் ஹாபிஸ் நஸீர் அஹமட் தேர்தலிலே இறங்குகின்ற போது வாக்காளர்களை கட்சியின் பக்கம் வசிகரிப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

அவர் முதலமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருக்கின்றார். இதனால் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை இலகுவாக பகைத்துக்கொள்ள வாக்காளர்கள் விரும்பமாட்டார்கள். அவர் இந்த தேர்தலிலே வென்றாலும் தோற்றாலும் வாக்காளர்களுக்கு உதவி செய்கின்ற நிலைமையிலேதான் இருப்பார். வென்றால் பாராளுமன்றம் செல்வார் தோற்றால் முதலமைச்சராக இருப்பார். எப்படியும் வாக்காளர்கள் இவரிடம் செல்லத்தான் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே தேர்தலிலே போட்டியிடுபவர்கள் என பேசப்படுபவர்களின் பண பலத்தோடு ஒப்பிடும் போது அதிலும் ஹாபிஸ் நஸீர் அஹமட் உயரத்திலேதான் இருக்கின்றார். எனவே மட்டக்களப்பு வாக்காளர்களை அரசியல் ரீதியாவோஇ பண ரீதியாகவோஇ கையாளுகின்ற முழுத்திறமையும் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் இருக்கின்றது. அதற்கான வாய்ப்பும் அவருக்கு இருக்கின்றது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் தவமாய் தவமிருந்து கிடைத்த முதலமைச்சர் பதவியை விட்டுவிட்டு பாராளுமன்றம் செல்லத்தானா வேண்டும் என ஹாபிஸ் நஸீர் அஹமட் சிந்திக்க வேண்டும். இவர் இப்பதவியை துறந்தால்இ அந்த பதவி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸிற்கோ அல்லது ஒரு முஸ்லிமுக்கோ கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறி. எத்தனையோ பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள். ஏன் பேர்ட்டி பிரேம் லால் தனது அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சரை இராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சரானார். இப்பேர்பட்ட கீர்த்திமிக்க பதவியை இழக்க வேண்டுமா என ஹாபிஸ் நஸீர் அஹமட் சிந்திக்க வேண்டும். மேலும் ஹாபிஸ் நஸீர் அஹமட் முதலமைச்சர் ஆனதை றஊப் ஹக்கீம் வாழ்த்துகின்ற போது ‘நாங்கள் சாதாரண மினிஸ்டர். நீங்கள் சீப் மினிஸ்டர்’ என றஊப் ஹக்கீம் வாழ்த்தியதை இந்த இடத்தில் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

மேலும் தன்னுடைய முதலமைச்சர் ஆட்சி காலம் முடியும் தறுவாயில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்த பெண்ணும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்ணாக செல்லக்கூடாது. அவ்வாறு அவர்கள் செல்லமுடியாத சூழலை இங்கு உருவாக்கி தொழில் பேட்டைகளை உருவாக்கிக்கொடுப்பேன் என்ற தன்னுடைய இலட்சியத்தை அடிக்கடி மேடைகளில் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஞாபகப்படுத்தி வருகின்றார். இது யாருமே சிந்திக்காத ஒரு உன்னத விடயமாகும். ஆனால் 03 மாதத்தில் முதலமைச்சர் பதவியை துறந்துவிட்டு ஹாபிஸ் நஸீர் அஹமட் சென்றால் எவ்வாறு இந்த உயர்ந்த இலட்சியத்தை அடையப்போகின்றார்?

அந்த நாளில் இருந்து ஒரு கதை இருந்து வந்துள்ளது. அதாவது றஊப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஒரு முஸ்லிம் காங்கிரஸ் காராருக்கு வழங்க விருப்பமில்லைஇ ஏனென்றால் கிழக்கில் முதலமைச்சராக வருபவர் கட்சிக்கும் தலைவராக வந்துவிடுவார் என்ற பயம்தான் காரணம் என்ற கதை உண்டு. இந்த கதை உண்மையானால் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஒன்றை யோசிக்க வேண்டும். நீங்கள் இருக்கும் பதவி கட்சி தலமைத்துவத்தை பிடிக்கக்கூடிய பதவி. இந்த வாய்ப்புக்களை ஏன் நீங்கள் இழக்க வேண்டும்?

ஹாபிஸ் நஸீர் அஹமட் பொதுத்தேர்தலில் கேட்காமல் இருந்து அதனால் மட்டக்களப்பு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தாலும் பரவாயில்லை. முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை இழக்க முடியாது.

இரண்டு வருடத்தில் இந்த முதலமைச்சர் கூத்து முடிந்துவிடும். அதன் பின்னர் என்ன செய்வதென்று ஹாபிஸ் நஸீர் அஹமட் யோசித்தால் 2 வருடத்தின் பின் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லகூடியவாறு இப்போதே தேசிய பட்டியலை ரிசேவ் பண்ணவேண்டியதுதானே. உங்களால் இயலாதது ஒன்றுமில்லை. கூல்.

தமிழர் கூட்டமைப்பு 4 பிரதிநிதிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறுவதற்கான வியூகம் அமைப்பதாக கூறப்படுகின்றது. இது ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. 1994 ஆம் ஆண்டிற்கு பிறகு எப்போதும் அவ்வாறு தமிழர் கூட்டமைப்போ அல்லது தமிழ்ர்களோ 4 ஆசனங்களை பெற்றது கிடையாது. சிலர் சென்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி பால சிறி சேனாவிற்க்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த கணிப்பீட்டை கூறுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களிடமிருந்த உணர்வு வேறு. பாராளுமன்ற தேர்தலிலே தனக்குஇ தனக்கு என்ற உணர்வே மேலோங்கும். புலிகளுடைய காலத்திலே ஒற்றுமைப்பட்டு 4 ஆசனங்களை பெற தமிழர்களுக்கு முடியவில்லை.

அப்போதே ஒற்றுமைப்படாத தமிழர்கள் இப்போது ஒற்றுமைப்படுவதற்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. 4 தமிழ் பிரதி நிதிகளை பாராளமன்றத்திற்கு அனுப்புகின்ற போது அந்த நன்காவதாக செல்லுகின்ற பாராளுமன்ற பிரதிநிதி தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தையா பெற்றுக்கொடுக்க போகின்றார். இல்லை அவரும் இருப்த்திரெண்டோடு சேர்ந்து இருபத்திமூன்றாவது ஆளாக பாராளுமன்றத்திலே உட்காருவார்.

எனவே தமிழர்களுக்கு 3, முஸ்லிம்களுக்கு 2 ஆசனங்கள் கிடைப்பது நிச்சயம். ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து கேட்டால். இந்த இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் ஒற்றைக்கூட முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளமுடியாத அபாயம் உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிரியென கணிக்கும் அமீர் அலியும் ஹிஸ்புல்லாஹ்வும் தான் வெற்றி பெறுவார்கள். இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்காது முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்டு குறைந்தது ஒரு எதிரியாவது தோற்கடிக்க வியூகம் அமைக்க வேண்டும். இதனால் எதிரி ஒருவர் குறைவார் முஸ்லிம் காங்கிரசும் தனது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். ஒரு எதிரி எப்படியும் உருவாகத்தான் செய்வார். குறைந்தது ஒரு எதிரியாவது தோற்கடித்து முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைத்துக்கொள்ளலாம்.

கடந்த காலங்களில் பல தடவைகள் ஐக்கிய தேசிய கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் பொதுத்தேர்தலிலே இணைந்து கேட்டிருக்கின்றார்கள் ஒவ்வொரு முறையும் இணைந்து கேட்கும் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் பிரதி நிதிகள் எவரையும் நிறுத்தக்கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதிகளை நிறுத்துமென நிபந்தனை விதித்து முஸ்லிம் காங்கிரஸ் ஏகபோக உரிமையை அனுபவித்தனர். ஆனால் இதனை இம்முறை பிரதமர் ரணிலிடம் சாதிக்க முடியாமல் ஏன் றஊப் ஹக்கீமால் போனது. முஸ்லிம் காங்கிரஸ் ரணிலின் நம்பிக்கையை இழந்துவிட்டதா? ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பலவீனமடைந்துவிட்டதா? முக்கியமான சந்தர்பங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு அரசங்கத்தோடு இணைந்ததுதான் இந்த நம்பிக்கையீனத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாமா?

நல்லாட்சிக்கான மக்கள் முண்ணனி றஊப் ஹக்கீமோடு பேச்சுவார்த்தை நடாத்தியதாக அறிய கிடைக்கின்றது. இதன் போது தாங்கள் தமிழர் கூட்டமைப்போடு கேட்கவிருப்பதாகவும் அதற்கு பதிலாக தேசிய பட்டியல் தங்களுக்கு வழங்க இருப்பதாகவும் அதற்கு பதிலாக முஸ்லிம் வாக்குகளில் 5000 மட்டில் பெற்றுத்ததந்தால் போதும் அதுவும் திருகோணமலையில் பெற்றுத்தந்தால் போதும் என்று தமிழர் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாவும். நல்லாட்சிக்கான மக்கள் ஒன்றியம் றஊப் ஹக்கீமிடம் மனம் திறந்து பேசியதாக செய்திகள் கசிந்துள்ளது.

‘நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொண்டதற்காக எந்த முஸ்லிமும் தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்க போவதில்லை. எனவே நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியினரை தலைவர் றஊப் ஹக்கீம் கண்டுகொள்ள தேவையில்லை அவர்களுடைய வழியிலேயே அவர்களை விட்டுவிட வேண்டும்.’ என்று முபீன் கூறிய கூற்றை றஊப் ஹக்கீம் ஏற்றுக்கொள்ளாமல் நல்லாட்சிக்கான மக்கள் ஒன்றியத்தின் வாக்குகளையும் கருத்திற்கொண்டு மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலமையையும் கருத்திற்கொண்டு அவர்களையும் இந்த தேர்தலிலே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்தப் பெரிய தமிழர் கூட்டமைப்பே 5000 வாக்குகளுக்கு ஒரு தேசிய பட்டியல் தர முன்வந்த போது நாங்கள் அந்த 5000 வாக்குகளை எவ்வாறு புறக்கணிக்க முடியும்? இவர்களை சேர்ப்பதால் கட்சி தலமைக்கு ஒரு தீமை ஏற்படத்தான் செய்யும். அதாவது கட்சிக்குள் வந்தாலும் கட்சி தலமையை தொடர்ந்தும் விமர்சித்து கொண்டுதான் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் விமர்சிக்கின்ற பழக்கம் PMGG இடம் மாத்திரமில்லை JVP மற்றும் TNA இடமும் எதை எடுத்தாலும் விமர்சிக்கின்ற பழக்கம் உள்ளது. PMGG இன் இந்த செயலை றஊப் ஹக்கீம் ஒரு தீமையாக பார்க்காமல் நன்மையாக பார்க்கலாம். எவ்வாறு? ஒரு தலைவர் வெறும் புகழ்ச்சியால் மாத்திரம் தலைவராய் இருப்பதைவிட நேர்மையான விமர்சனங்களால் தன்னை திருத்தி புடம் போடுவதன் மூலம் சிறந்த தலைவராகவும் நிரந்தரமான தலைவராகவும் முடியும். வெறும் புகழ்ச்சியால் மாத்திரம் தலைவராக முடியாது.

இந்த தேர்தலிலாவது முஸ்லிம் காங்கிரஸின் தலமைகள் தங்களை முற்றாக திருத்தி தன்னலம் பாராது சமூக நலன் கொண்டு செயற்படக்கூடிய தலமைகள் உருவாக வேண்டுமென இந்த புனித றமழானிலும் தேர்தல் காலத்திலும் அல்லாஹ்வை பிரார்த்திப்போம். ஏன் எனில் ஒரு சமூகத்திற்கு நல்ல தலமைகள் கிடைப்பது அந்த சமூகத்திற்கு அல்லாஹ் செய்கின்ற பெரிய கிருபையாகும்.

Published by

One response to “றஊப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்யவேண்டும்”

  1. Vote for Padaiyappa.

Leave a reply to mohdrislan Cancel reply