கொழும்பு: பொதுத் தேர்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்துவது இம்முறை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மத வைபவங்களை நடத்தும் தோரணையில் அரசியல் கூட்டங்களை நடத்த விகாரைகள் பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்களில் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.
அரச வைபவங்களுக்கு அரசியல் கட்சிகளின் கொடிகளையும் இலச்சினைகளையும் அரசியற் கட்சி வைபவங்களில் தேசியக்கொடி, மாகாணக்கொடி ஆகியவற்றையும் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a comment