சண்டியாகோ: கோபா அமெரிக்கா சம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆர்ஜன்டீனா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில் சிலி சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்தது.
99 வருட கால கோபா அமெரிக்கா வரலாற்றில் இதுவரை சிலி சம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது. இந்த நிலையில் முதல் முறையாக அது சம்பியன் ஆகியுள்ளது.
அதுவும் தனது நாட்டில் வைத்து வரலாறு படைத்து சிலி மக்களை குஷியில் சிலிர்க்க வைத்து விட்டது. லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணிக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்திருந்தது. மெஸ்ஸி உள்ளிட்டோரை ஆர்ஜென்டினா ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Published by


Leave a comment