டெல் அவிவ்: இஸ்ரேல் காவல்துறையின் தேசிய மோசடி-விசாரணைத் துறையின் தலைவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை கூறுகின்றது. ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
எப்ராஹிம் பிராச்சா, அவரது காரில் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு லஞ்சம் கொடுத்திருந்ததாக பிரபல மதபோதகர் ஒருவர் அண்மைய நீதிமன்ற வழக்கொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
அவரிடம் ஊழல்மோசடி விசாரணை நடத்தப்படுவதாக கடந்தவாரம் ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.
Leave a comment