அர்ஜூன ரணதுங்க தலைமையிலான குழு ஐ.தே.கவில் இணைந்து போட்டி

arjuna ranathungaகொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப் பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ. ம. சு. முவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மஹிந்தவை எதிர்த்து வெளியேறிய குழுவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிரதானமானவர்.

அர்ஜுனவும் அவரோடு அப்போது வெளியேறியோரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐ. தே. க அரசுடன் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதர வளித்தனர்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ. ம. சு. மு. முன்னணியில் போட்டியிட இடமளித்ததால் அர்ஜுன ரணதுங்க உட்பட அவரோடு வெளியேறியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

பொதுத் தேர்தலில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் ஐ. தே. க. மூலம் போட்டியிட ஏற்க னவே பேச்சுவார்த் தைகளை ஆரம்பி த்துள்ளனர்.

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க உட்பட பிரபல அரசியல் தலைவர்களும் தற்போது உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இவர்கள் தீர்மானித்துள்ள னர். ஐ.ம.சு.முவிலிருந்து வெளியேறிய ஹெல உருமய உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தமிழ் முற்போக்கு முன்னணி பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் போட்டி யிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் இந்நாட்களில் நடத்தப்படுமென அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ. ம. சு. முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டதையடுத்து சு. க. தலைமை வகிக்கும் ஐ. ம. சு. மு.க்குள் பாரிய பிளவுகள் ஏற்படுவதற்கான எதிரொலிகளே இந்த வெளியேற்றங்கள் என அரசியல் அவதானிகள் தெரி வித்துள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ. ம. சு. மு.வில் வேட்புமனு வழங்கப் பட்டமை கட்சியை தனிப்பட்டவரின் குடும்ப ஆதிக்கத்துக்குள் கட்டிப்போட வழி வகுக்கும். சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து செயற்பட ஐ. ம. சு. மு. தவறிவிட்டது.

எனவே எதிர்வரும் தேர்தலில் ஜனநாயகம், நல்லாட்சியைப் பலப்படுத்தும் பொருட்டே ஐ. ம. சு. முவிலிருந்து அர்ஜுன ரணதுங்க அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, ஜாதிக ஹெல உறுமய போன்றன வெளியேறும் தீர்மானத்தை மேற்கொண்டு ள்ளதாக தெரிய வருகிறது. மற்றும் சிறுபான்மை கட்சிகளும் ஐ. ம. சு. முவின் நிலைப்பாட்டில் பாரிய அதிருப்திகளை வெளியிட்டுள்ளன.

Published by

Leave a comment