– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஆண்களுக்கான மாபெரும் இப்தார் ஒரு நேற்று அதன் கிழக்குப் பிராந்திய காத்தான்குடி மக்கள் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், மாணவர்கள், சமூக நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட NFGGயின் பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) அவர்கள் நிகழ்வுக்குத் தலைமைதாங்கி உரையாற்றியதுடன் விஷேட உரை ஒன்றினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார்.
வருடா வருடம் NFGGயினால் ஏற்பாடு செய்யப்படும் இவ் இப்தார் நிகழ்வின் அடுத்த கட்டமாக இன்று பெண்களுக்குன இப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment