வெலி ஓய: வன்னி மாவட்டத்திற்குட்பட்ட வெலி ஓய சிங்கள பிரதேசங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
வெலி ஒயாவில் அமையப் பெறவுள்ள கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கலினை அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார்.அதே வேளை இந்த பிரதேச யுவதிகளின் நன்மை கருதி அமைச்சின் கீழ் உள்ள பயிற்சி நிலையத்தினால் ஆரம்பிக்ப்பட்ட தையல் பயிற்கயினை நிறைவு செய்து கொண்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் மற்றும் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட உபகரணங்கள் அமைப்புக்களுக்கும் வழங்கப்பட்டன..
இங்கு அமையப் பெறவுள்ள கைத்தொழில் பேட்டையில் முதற்கட்டமாக 1000 பேர்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இப்பிரதேச மக்களின் வாழ்வாதார மற்றும் கல்வி மேம்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக,வடமத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நளின்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்,வெலி ஓய பிரதேச சபை உறுப்பினர் ம!ஞ்சு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Leave a comment