யாழ்ப்பாணம்: வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதான தளமாக கொண்டு நேற்று உதயம் ஆகி உள்ளது ஜனநாயக போராளிகள் கட்சி.2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, விழுமியங்கள் விலை போயின.
குழப்பவாதிகளும், சுயநலவாதிகளும் தமிழ் தேசியம் என்கிற புனிதமான வார்த்தையை தேர்தல் மந்திரமாக உச்சரித்துக் கொண்டு அரசியல் விபச்சாரம் நடத்தி வருகின்றார்கள்.
போதைப் பொருள் வியாபாரத்தின் கூடாரமாக வட மாகாணம் மாற்றப்பட்டு உள்ளது.
சட்டத்துக்கு புறம்பான குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து அடிக்கடி வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்கிற ஆசையில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் வேசையாட கிளம்பி வருகின்றார்கள்.
படுகொலைகள், கற்பழிப்புக்கள், கொள்ளைகள், கடத்தல்கள் என்று பல வேறு வடிவங்களிலும் வன்முறைகள் முன்பு ஒருபோதும் இருந்திராதவாறு நான்காம் ஈழப் போருக்கு பின்னர் பெருக்கல் வாய்ப்பாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
பெற்றோருக்கு கட்டுப்பட பிள்ளைகள் மறுக்கின்றார்கள். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க மாணவர்கள் தவறுகின்றார்கள். பெரியவர்களை கனம் பண்ணாமல் சிறியவர்கள் அலட்சியம் செய்கின்றார்கள். மொத்தத்தில் எங்கும் எதிலும் ஒழுங்கு இல்லை.
இந்நிலையில்தான் புலிகள் இன்று இல்லையே? என்று புத்திஜீவிகள்கூட ஏங்கினர்.
விமர்சனங்களுக்கு அப்பால் புலிகளின் காலத்தில் மிக ஒழுங்கான சமுதாய கட்டமைப்பு பேணப்பட்டது. தங்க ஆபரணங்கள் அணிந்து தனியாக நள்ளிரவில் ஒரு பெண் எவ்வித இடையூறும் இல்லாமல் நடமாடக் கூடிய உண்மையான சுதந்திரம் நிலவியது. குற்றம் புரிந்தவர்களுக்கு பாரபட்சம் இன்றி உடனுக்குடன் தண்டனை வழங்கப்பட்டது.
இப்போது முன்னாள் புலிகள் மீண்டும் ஒரணி சேர்ந்து உள்ளனர். காலத்தின் மாற்றத்தை அனுசரித்து போராட்ட வடிவத்தை மாற்றி உள்ளார்கள். ஜனநாயக அரசியல் ஊடாக தமிழ் மக்களுக்கு உரிமையை மாத்திரம் அன்றி இயல்பு வாழ்க்கையை யும் பெற்றுக் கொடுக்க தியாக தீபம் திலீபன் முன்னிலையில் சபதம் எடுத்து உள்ளார்கள்.
இனி யாழ்ப்பாணம் திருந்தி விடும் அல்லது திருத்தப்படும். மாலை 6.00 மணிக்கு பின்னர் காக்கா, குருவியைக்கூட வீதியில் இனி மேல் காண முடியாது.
– மின்னஞ்சல்: தாய்நாடு
Published by

Leave a comment