மைத்திரி-மகிந்த புதிய கூட்டணி: மகிந்த அணியில் ஹூனைஸூக்கு ஆசனம்

hunais-mp[1]– முகம்மட் மக்பூல்

கொழும்பு: மகிந்த – மைத்திரி புதிய அரசியல் கூட்டணி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சூழ்நிலையில், மகிந்த அணி சார்பாக முன்னாள் எம்பி ஹூனைஸ் களமிறங்கவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

வன்னி மாவட்டத்தில் மகிந்த அணி சார்பாக போட்டியிட முன்னாள் எம்பி ஹூனைஸூக்கு இரண்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது. அதன்படி இரண்டாவது நபராக ஹூனைஸின் வேண்டுகோளை ஏற்று வவுனியாவை சேர்ந்த மஸ்தான் என்பவர் போட்டியிடவுள்ளார்.

ஐதேக, மைத்திரி அணி , மகிந்த அணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு என ஆசன ஒதுக்கீடு கேட்டு அக்கட்சிகளின் காரியாலங்களை ஏறி இறங்கிய ஹூனைஸ் எம்பிக்கு தற்போது இறுதியாக மகிந்த அணி கைகொடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த கடைசி இரு வருடங்களில் முஸ்லிம் சமுகம் பாரிய அசௌகரியங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டது.

முஸ்லிம்களின் ஹலால், ஹபாயாவில் கைவைத்த மகிந்த அரசு, நாடுபூராகவும் ஐம்பதிற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருந்தது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஹூனைஸ் எம்பி முஸ்லிம் சமுகத்தை முன்னிலைப்பபடுத்தி மகிந்த அரசை விட்டு வெளியேறி ஐதேகவில் இணைந்து கொண்டதாக அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அவ்வாறு அன்று மகிந்த அரசின் மீது குற்றம் சுமத்திய ஹூனைஸ், தற்போது மகிந்த தரப்புடன் இன்று அவர் வன்னியில் போட்டியிட ஆசனம் பெற முயற்சித்திருப்பது வன்னி மாவட்ட முஸ்லிம்களை மட்டுமன்றி நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.

வழங்க முன்வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Published by

One response to “மைத்திரி-மகிந்த புதிய கூட்டணி: மகிந்த அணியில் ஹூனைஸூக்கு ஆசனம்”

  1. Is it true

Leave a comment