கொழும்பு: நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.
இதன் மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இன்று காலை அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவை குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
குருணாகல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கணாப்படுகின்றனர்.
அங்கு சுமார் 14 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
ஆகவே குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுமாறு வேண்டகோள் விடுத்துள்ளோம்.
அத்துடன் இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Leave a comment