கொழும்பு: அரசியலில் மீள்பிரவேசம் செய்வதென்ற தனது முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன் தினம் பகிரங்கமாக அறிவித்து விட்டார். மஹிந்தவின் எதிர்காலம் தொடர்பாக ஊடகங்கள் அண்மைக் காலமாக வெளிப் படுத்தி வந்த பரபரப்பு நேற்றுமுன்தினம் ஓரளவு தணிந்திருக்கிறது.
மஹிந்த எவ்வாறு தேர்தலில் களமிறங்கப் போகிறார் என்பதே அடு த்த கட்டச் சர்ச்சை ஆகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடையாதென்றே எண்ணத் தோன்றுகிறது. தனியான அணி யொன்றை உருவாக்கி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.
இவ்வாறான இரு வேறு ஊகங்கள் குறித்த சர்ச்சைதான் இனிவரும் இரண்டொரு தினங்களுக்கு ஊடகங்களுக்கு பரபரப்பான செய்தி யாக அமையப் போகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மக்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும் ஊடகங்கள் அவரைக் கைவிட்டு விடவில்லை. முன்னாள் ஜனாதிபதியை சர்ச் சைக்கும் பரபரப்புக்கும் உரிய பாத்திரமாக இத்தனை தூரம் மாற்றி யதே எமது ஊடகங்கள்தான்.
பரபரப்புக்குரிய அம்சங்களே ஊடகங்களுக்கு எக்காலத்திலும் ஜன ரஞ்சக முக்கியத்துவத்தை அளிக்கின்றன. விரும்பப்படும் விட யங்கள் அல்லது வெறுக்கத்தக்க விவகாரங்கள் என்ற வேறுபா டெல்லாம் ஊடகங்களுக்கு முக்கியமானதல்ல. பரபரப்பைத் தேடு கின்ற மனிதனின் இயல்பான சுபாவமே ஊடகங்களுக்கு வாய்ப் பாக அமைந்து விடுகிறது.
மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்த செல்வாக்கை கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் துல்லியமாக வெளிப்படுத்தி விட்டது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்த வொரு பிரதேசத்திலுமே சிறுபான்மை மக்கள் மத்தியில் அவரு க்கு குறைந்தபட்ட செல்வாக்கும் கிடையாதென்பதை தேர்தல் முடிவு தெட்டத் தெளிவாகக் காட்டி விட்டதென்பது வேறு விட யம்..
மறுபுறத்தில் நோக்குகையில் சிங்கள மக்களின் ஒரேயொரு தனிப் பெரும் காவலன் தாம் மட்டுமே என்று தேர்தல் மேடைகளில் அவர் முழக்கமிட்டு வந்த போதிலும் தேர்தல் முடிவு அவ்வாறு புலப்படுத்தவில்லை. பெரும்பான்மை மக்களில் சுமார் அரைப் பங்கு தொகையினர் மத்தியிலேயே செல்வாக்குப் பெற்றவராக மஹிந்த விளங்குகிறாரென்பதே ஜனாதிபதித் தேர்தல் முடிவு உணர்த்தியிருக்கும் உண்மையாகும்.
மஹிந்த ராஜபக்ஷ அக்காலம் தொடக்கம் இக்காலம் வரை சிறு பான்மை மக்களையும் பெரும்பான்மை மக்களையும் இலங்கை யின் வெவ்வேறு சாகியங்களாகவே வகைப்படுத்தி நோக்குகின் றார்.
அன்றைய பிரசார மேடைகளில் மாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலுக் குப் பின்னரான மக்கள் சந்திப்புகளிலும் கூட சிறுபான்மை மக் களை சிங்கள மக்களுக்கு நிகரான பிரஜைகளாக ஏற்றுக் கொள் ளும் விதத்தில் அவரது கருத்துகள் அமைந்ததில்லை.
எனினும் பல்லின மக்கள் பாரம்பரியமாக வாழ்கின்ற நாடொன்றில் முன்னாள் ஜனாதிபதியின் கணிப்பு ஏற்புடையதல்ல. நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களால் அவர் தேர்தலில் நிராகரிக்கப்பட்டிருக் கிறாரெனக் கூறுவதே பொருத்தமானது.
தேர்தலில் தோல்வியுற்ற அவர் குறிப்பிட்ட சில காலப் பகுதியில் மாத்திரமே மறக்கப்பட்ட மனிதராக இருந்தார். ‘மஹிந்த’ என்ற பாத்திரத்தை ஊடகங்கள் வாயிலாக ஊதிப் பெரிதாக்கியதில் அவரது முக்கிய அபிமானிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. விமல்வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில, தினேஷ் குணவர்தன ஆகியோரை பிரதானமாகக் குறிப்பிட்டுக் கூற முடியும்.
தேசத்தில் தனிப் பெரும் தலைவனாக மஹிந்தவை உருவகப்படுத்திய வர்களே இவர்கள்தான். இவ்வாறானதொரு முயற்சிக்கு ஊடகங்க ளையும் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியிலன்றி ஊடகங்களிலேயே ‘மஹிந்த’ என்ற பாத்திரம் பூதாகரமாக்கப்பட்டிருப்பதென்ற உண்மை மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் நாமம் இத்தனை தூரம் பெரிதாக்கப் பட்டிருப்பதற்கான ஆயுதமாக இனவாதமே பயன்படுத்தப்பட் டுள்ளதென்ற உண்மையை சிறுபான்மை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். சிங்கள மக்களின் உள்ளங்களில் சிறுபான்மை யினருக்கு எதிரான வெறியை விதைக்கின்ற நகர்வுகளே இப்போது தென்னிலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றன.
நாட்டின் ஆட்சித் தலைமையைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறு பான்மை மக்கள் அமைந்து விட்டதனால் உருவான வன்மம் இன் னும் அவர்களிடம் தணியவில்லை. நாட்டின் வேறொரு இனக்குழு வாக சிறுபான்மை மக்களை அவர்கள் நோக்குகின்றனர். சிறு பான்மை மக்களை இலங்கையின் தேசியத்துக்கு விரோதமான சக்தியாக சிங்கள மக்களிடம் காண்பிக்கும் பிரசாரத்தை அவர்கள் வெளிப்படையாகவே முன்னெடுக்கின்றனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குரிய வாய்ப்பான துரும்பாக அவர்களுக்கு இனவாதமே அமைந்து விட்டது.
இவ்வாறான அரசியல்வாதிகள் இலங்கையில் எக்காலத்திலுமே இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை யென்பது நன்றாகவே புரிகிறது. இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்பு வதற்கான அனைத்துத் தரப்பு முயற்சிகளுக்கும் இவர்கள் முட்டுக் கட்டையாகவே செயற்படப் போகின்றார்களென்பது மட்டும் நிதர் சனமாகப் புரிகிறது.
முன்னாள் ஜனாதிபதியும் இனவாதமென்ற மேடையில் நின்றே தனது அரசியல் மீள்பிரவேசத்தை ஆரம்பத்திருப்பது தெரிகிறது. அவரது அணியில் பரபரப்புப் பிரசாரகர்களாக விளங்குவோரின் உரைகள் இனவாதத்தையே பறைசாற்றுகின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் தலைவரை ஒட்டுமொத்த மக்களின் தலைவராக அவர் கள் உருவகித்துக் காட்ட முற்படுவது வெறுமனே ஊதிப் பெருக்க வைத்த சங்கதிதான்.
(ஆசிரியர் தலைப்பு தினகரன்)
Published by




Leave a comment