மட்டு.போதனா வைத்தியசாலை குழு உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் நியமனம்

jawfer khan– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு (hospital committee)உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞரும் பன்னூலாசிரியருமான ரீ.எல்.ஜவ்பர்கான் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017.04.27வரை இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் டி.எம்.சநதிரபாலவின் சிபாரிசின் பேரில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு முதல் எழுத்து மற்றும் ஊடகத்துறையில் ஈடுபட்டுவரும் ஜவ்பர்கான் 2000ம் ஆண்டு அவரது மௌனதேசம் என்ற கவிதை நூலிற்கான தேசிய அரச சாஹித்திய மண்டல விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 7 நூல்களையும்உரு காவியத்தையும் எழுதியுள்ள இவர் ஆயிரக்கணக்கான கவிதைதகள் மற்றும் சிறுகதைகள் உட்பட பல படைப்புகளை ஈழுத்து இலக்கிய உலகிற்கு தந்துள்ளார்.முழுநேர ஊடகவியலாளரான இவர் அரசியல் செயற்பாட்டாளருமாவார்.

Published by

Leave a comment