பொதுத்தேர்தல் தொடர்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் கலந்துரையாடல்

nfgg– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த இல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதனுடைய தெரிவாக அமையும் என்றும் மேலும், இன்னும் சில நாட்களில் தங்களுடைய இறுதியான நிலைப்பாட்டை எட்ட இருப்பதாக NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இப்தார் வைபவமும் NFGGயின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பொதுத்தேர்தலில் கட்சியின் செயற்பாடுகள், தேசிய இளைஞர் கவுன்சிலின் பங்களிப்பு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

nfgg

​இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், பிரச்சார செயலாளர் சிறாஜ் மஸ்ஹூர், NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் தலைவர் சட்ட மாணவன் நௌஷாட் மஹ்ரூப், இளைஞர் கவுன்சிலின் இடைக் கால செயலாளர் நளீர் (இஸ்லாஹி), இளைஞர் கவுன்சிலின் உறுப்பினர்களான சப்ராஸ், பஹீம் ஹனீபா, அர்க்கம் முனீர் உட்பட இன்னும் பல முக்கிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

nfgg1

Published by

One response to “பொதுத்தேர்தல் தொடர்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் கலந்துரையாடல்”

  1. TNA is better choice

Leave a reply to mohdrislan Cancel reply