“தாஜுதீனின் அழைப்பு விபரத்தை வழங்கமுடியாது” – டயலொக்

wasim thajudeenகொழும்பு: ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பில் சாட்சியமாக கருதப்படும் கையடக்க தொலைபேசி அழைப்பு விபரத்தை வழங்குமாறு நீதிமன்றம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் டயலொக் நிறுவனம் பிரமாணப் பத்திரமொன்றை இன்று (02) வழங்கியிருந்தது.

குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு விபரத்தை தங்களால் வழங்க இயலாதுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு குறித்த அறிவித்தலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு குறித்த இலக்கத்தின் தொலைபேசி அழைப்பு விபரம் 3 மாதங்கள் மாத்திரம் தங்களது நிறுவனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் எனவும் அதன் பின்னர் அது அழிக்கப்பட்டு விடும் என்பதே இந்நிலைமைக்கு காரணம் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரக்பி வீரர் தாஜுதீன் கடந்த 2012 இல் இடம்பெற்ற கார் விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

wasim thajudeen

Published by

Leave a comment