இங்கிலாந்தின் அதியுயர் வெப்ப நிலை நேற்று பதிவாகியது

sun– MJ

லண்டன்: இங்கிலாந்தின் கடந்த 9 வருடங்களின் பின்னர் அதி வெப்பநிலையாக 37.7 செல்சியஸ் வெப்பநிலை நேற்று புதன்கிழமை பதிவாகியது. லண்டன், ஹீத்ரோ விமானநிலையத்தில் இவ்வெப்பநிலை பதிவாகியிருந்ததாக பிரித்தானிய வானிலை நிலையம் அறிவித்திருக்கிறது.

லண்டனைச் சூழவுள்ள பிரதேசங்களில் 35 செல்சியஸ் வெப்பநிலையும், ஏனைய பிரதேசங்களில் முப்பதுக்கும் முப்பத்தைந்திற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்பட்டது.

பிரித்தானிய வரலாற்றில் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அதிக வெப்பநிலையாகவும் நேற்றைய வெப்ப நிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sun

Published by

Leave a comment