அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடுகிறது பொன்சேகாவின் கட்சி
கொழும்பு: பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கட்சியான புதிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது. அதன் செயலாளரான சமில பெரேரா இதுதொடர்பில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக
களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியின் அன்னப்பறவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடுகிறது பொன்சேகாவின் கட்சி
2010 ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கிய சரத் பொன்சேகாவும் அன்னப்பறவை சின்னத்திலேயே போட்டியிட்டிருந்தார். ஆயினும் தமது கட்சியுடன் வேறு யாராவது இணைந்து போட்டியிடவுள்ளார்களா என்பது குறித்து அதன் செயலாளர் குறிப்பிடவில்லை.
Leave a comment