அசாத் சாலிக்கு ஏமாற்றம்: கிழக்கில் போட்டியிடுகிறார்?

asad sali (2)கொழும்பு: தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு ரணில், அவரை ஐக்கிய தேசியக் கட்சியில் சார்பில் கிழக்கில் போட்டியிடுமாறு கடுந்தொனியில் கூறியுள்ளார்.பிரதமரின் இக்கருத்தினால் அசாத் சாலி, மனவருத்தமடைந்ததுடன் பெரும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்.

asad sali (2)
காத்தான்குடியில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதித் தேர்தல் பீரங்கிப் பிரச்சாரத்தின்போது

மகிந்தவை எதிர்த்து தேர்தல் மேடைகளில் பேசும் அசாத் சாலிக்கு கிழக்கிழங்கை முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்ததலில் அமோக ஆதரவை வழங்கி இருந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல், பிரதேசவாதங்களை ஒவ்வொரு பிரதேசங்களிலும் தோற்றுவிப்பதால், கிழக்கில் போட்டியிட்டால், அசாத் சாலிக்கு கிழக்கு முஸ்லிம்கள் எத்தகைய ஆதரவுகளை வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியே!SHM

Published by

Leave a comment