லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை

imageலண்டன்: பிரிட்டனின் மிகப்பெரிய விமான நிலையமான ஹீத்ரோவில் மூன்றாவது ஓடுபாதை ஒன்றை அமைக்க அரசால் நியமிக்கப்பட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மூன்றாவது ஓடுபாதை அமைக்கப்படுவதில் கட்விக் விமான நிலையத்தைவிட ஹீத்ரோவே இதற்கு மிகவும் ஏற்றது என அந்தக் குழுவின் தலைவர் ஹோவர்ட் டேவிஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய சந்தைகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகள் இயக்கப்படுவது தொடர்பில் மூன்றாவது ஓடுபாதைக்கு கட்விக்கை விட ஹீத்ரோவே உகந்தது என அவரது அறிக்கை கூறுகிறது.

image

இதேவேளை இந்த அறிவிப்பானது அரசியல் ரீதியில் முதிர்ச்சியற்றது என ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குளேயே எதிர்கருத்துக்கள் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஹீத்ரோ விமான நிலையம் விஸ்தரிக்கப்படாது என பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்திருந்த் நிலையில், இந்த அறிக்கை அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

புதிய ஓடுதளத்தை அமைக்க உத்தேசமாக 28 பில்லியன் டலர்கள் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment