ஹம்பாந்தோட்டை: மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த எதிர்பார்த்தபோதும் இறுதியில் அவருக்கு ஏமாற்றமே எஞ்சியதாகத் தெரியவருகிறது.
நேற்றைய கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துகொண்டு தனக்கு ஆதரவு வழங்குவார்கள் என மஹிந்த எண்ணியிருந்தபோதும் அவர்கள் கலந்துகொள்ளாமை குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை அழைப்பு விடுவதற்காக 100ற்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெதமுலன செல்லவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். எனினும், 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதனைவிட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா உள்ளிட்ட சிலரே இதில் கலந்துகொண்டிருந்தனர்.
மெதமுலன கூட்டம் மஹிந்தவுக்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது
நாட்டை மீண்டும் பொறுப்பேற் குமாறு இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுத்ததுடன், அந்த அழைப்பை தான் நிராகரிக்கப்போவ தில்லையென்றும் கூறியிருந்தார். இதனைவிட பிரதமர் வேட்பாளராகவோ, கட்சித் தலைவராகவோ தான் போட்டியிடப்போவதாகவோ மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட வில்லை.
Leave a comment