தர்கா நகர்: தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டு பின்னர் புனரமைப்பு செய்யப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலிப்பெட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளார்.
இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் ஆட்டோ செலுத்திவந்த அந்நபர் நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் நான்கு சிங்கள இளைஞர்களும் இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் இடையில் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினர் குறித்த பிரதேசத்திற்கு வருகை வந்து நிலைமைகளினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதேவேளைஇ இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அங்கு சாதாரண நிலை காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by

Leave a comment