‘கிளி மகாராஜா’வின் தொலைகாட்சியில் மீண்டும் வில்பத்து விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது

northஅபூ அஸ்ஜத்

கொழும்பு: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்னால் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தமக்கு எதுவும் தெரியாது என்று கிளிப் பிள்ளை பேச்சினை நேற்று களி மகாராஜாவின் தொலைக்காட்சியில் கூறியது மட்டுமல்லாது கிளி மகாராஜாவின் படையணியினர் விமானத்தில் வில்பத்து மீது பரந்து திரிந்துவிட்டு அதிலிருந்த ஊடகவியாளால பெண்மணி வெறிபிடித்தவர் போல் வில்பத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிக்கின்றார் என்று குரல் கொடுத்த காட்சியினையினையும் எம்மால் காணமுடிகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாமல் போயுள்ள நிலையில் இன்னும் அந்த பதவிகளில் இருப்பதாக கூறிக் கொள்ளும் சிலர் மீண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்திலும்,அமைச்சரவையிலும்,கடும் வமர்சனங்களயும்,எதிர் உரைகளையும் ஆற்றியவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகும்.இந்த திருத்தம் முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்நதனால் அதனை மீள பெருமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தைரியமாக அரசாங்கத்துக்கு சொன்னது மட்டுமல்லாமல்,இது தொடர்பில் பிரதமர்,மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதி நிதிகளுடனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்காண்டமையானது இலங்கை அரசியலில் துணிந்த தலைமைத்துவத்துக்குள் லட்சணங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டுள்ளார் என்பதற்கு போதுமான சான்றாகும்.

நாட்டில் காலத்திற்கு காலம் ஏற்படும் நிகழ்வுகள் தொடர்பில் தமது வன்னி மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் தேசியத்துக்குமாக குரல் கொடுக்கும் தலைமைத்துவமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மறினமித்துள்ளதை இன்று அவரது அணியில் அணிதிரளும் மக்கள் அலையினை வைத்து அறிந்து கொள்ளமுடிகின்றது.

இவ்வாறு சமூக சிந்தனையுடன் செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீனை எப்படியாவது அரசியலில் இருந்து வீழ்த்தும் சதிகள் பல திசைகளில் இடம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.அதில் வில்பத்து விவகாரம் மிகவும் முக்கியமானதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய கிளி மகாராஜாவின் தொலைகாட்சியில் மீண்டும் வில்பத்து விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதில் குறிப்பிடப்படும் விடயங்களும்,காட்சிகளும் உண்மைக்கு புறம்பானது என்பதற்கு அவர்கள் கூறும் கல்லாறு என்கின்ற பெயரே உறுதிப்படுத்துவனவாக இருக்கின்றது.பல இலட்சம் ரூபாய்கள் செலவ்ழித்து வமானமொன்றினை வாடகைக்கு அமர்த்தி வில்பத்துக்கு மேலால் சென்று இவற்றைக்கு பல நுறு வருடங்களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி கிராமங்களை மீண்டும் வில்பத்து வனம் என கூற ஆரம்பித்துள்ளனர்.

இதிலிருந்து தெரியவருகின்ற விடயம் என்னவெனில் இந்த கிளி மகாராஜாவின் தொலைக்காட்சி அலைவரிசை இந்த நாட்டின் கடந்தகால இனவாத செயற்பாடுகளுக்கு சோரம் போன முன்னாள் ஆட்சியாளரினதும்,தற்போதைய அரசியல்வாதிகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.முன்னாள் ஆட்சித் தலைவர் இனவாதிகளை கட்டுப்படுத்த தவறியமை இந்த நாட்டில் அவர் தனது பதவீனை இழக்க நேரிட்டது,அது மட்டுமல்லாமல் அவர் பகிரங்கமாக சில இடங்களில் கூறியதாக இணையத்தளங்கள் மூலம் அறியக் கூடிய விடயமாக அவருக்கு 3 எதிரிகள் இருக்கின்றனராம்,அதில் றிசாத் பதியுதீனும் ஒருவர் கூறியிருப்பதானது,தலைவர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றாக ஓரணியில் சேர்ந்து நிற்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகின்றது.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக தமது மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.அத்தோடு மட்டுமல்ல அவர்களது அனைத்து சொத்துக்களும் விடுதலைப் புலிகளினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன்,வணக்கஸ்தலங்கள் துவம்சம் செய்யப்பட்டன.இவ்வாறான கொடுமைகளை தமது நாட்டுக்குள் அனுபவித்த முஸ்லிம்கள் அகதிகளாக பல மாவட்டங்களில் தஞ்சமடைந்தனர்.இவ்வாறான இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு அரசியல் ரீதியாக பெரும் பழத்தினை பெற்றுக்கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்தில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை என்றே கூற வேண்டும்.இவ்வாறான மக்கள் பணிகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ்,சிங்கள மக்களுக்கும் செய்துள்ளார்.

முல்லி வாய்க்கால் சம்பவத்தினையடுத்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வந்த போது அவர்கள் அனைவரையும்,வவுனியாவில் தங்க வைக்கவென மெனிக்பார்ம் என்னும் நலன் புரி நிலையங்களை தோற்றுவித்தார்.அத்தனை அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார்,அவர் மீள்குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த காலத்திலும்,இதன் பிற்பாடு இந்த மக்களை சொந்த கிராமத்தில் குறுகிய காலத்தில் மீள்குடியேற்றம் செய்ததால் அமைச்சர் றிசாதினை சர்வதேசம் பாராட்டியது,பன்கீ மூன்,எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்கள் இவரது சேவைக்கு சான்றாக பேசினர்.

அவ்வாறு இனம் மதம் கடந்து பணியாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீனை இன்று இனவாத சக்திகளும்,மதவாத சக்திகளும் வீட்டில்பாடில்லை,மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன.குறிப்பாக சிங்கள ஊடகங்கள் சதாவும் இந்த வேலையினை செய்கின்றன.இதனது பின்னணி தான் முன்னால் ஜனாதிபதியினை தோல்வியடையச் செய்ய அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்பட்டார் என்பதற்காகவும்,தனிப்பட்ட சில ஊடக தேவைகளுக்காகவும்,அமைச்சரை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றமை தெளிவான உண்மையாகும்.

முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் மறிச்சுக்கட்டி,பாலக்குளி கிராமங்கள் பற்றியும்,முஸ்லிம்களின் இடம் பெயர்வு தொடர்பிலும் தெரியாது என்று கூறியிருப்பதில் இருந்து இந்த பெரும்பான்மை சமூக அரசியல் பிரதி நிதிகள் வடக்கு முஸ்லிம்களின் மீளகுடியேற்றத்திற்கு எதனையும் செய்யவில்லை என்பது புலனாகின்றது.தலைவலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று கூறும் மொழிக்கு ஒப்ப இடம் பெயர்வுகளும்,அகதிகளின் வேதனைகளும் அறிந்தவர்களால் மட்டுமே இதனது உண்மையான உணர்வை அறிந்து கொள்ள முடியும்,

அதனை செய்யக் கூடிய தகுதி கொண்ட ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றமை இந்த எதிர்சக்திகளுக்கு தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்பதையும் எமது மக்கள் நன்கறிந்து கொள்ள வேண்டும்.

சலுகைகளை இழக்கலாம்,ஆனால் உரிமையினை இழக்க முடியாது

Published by

Leave a comment