அபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொலைசெய்த பெண்ணுக்கு மரண தண்டனை

abudhabiஅபுதாபி: அபுதாபியில் அமெரிக்க ஆசிரியை ஒருவரை கொலைசெய்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில், ஒரு வர்த்த மையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

அலா பத்ர் அப்துல்லா அல் ஹஷீமி எனப்படும் அந்தப் பெண், இபோல்யா ரியான் என்பவரை கழிப்பறைக்குள் வைத்து சமையலறைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

பர்தா அணிந்திருந்த அல் ஹஷீமி, கொலை செய்வதற்கு முன்னரும் அதன் பின்பும் அங்கிருந்தது, சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

abudhabi

எகிப்திய அமெரிக்க வைத்தியர் ஒருவரின் குடியிருப்பிற்கு வெளியில், நாட்டு வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த குண்டு வெடித்திருக்கவில்லை என்றாலும் வெளிநாட்டவர்கள் அதிகமாக வாழும் ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தச் சம்பவம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.

Published by

Leave a comment