ஜப்பானில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணம்

Catடோக்யோ: ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16.

தெருவில் திரிந்த டமா என்ற இந்த பெண் பூனையை கிஷி நகரிலுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் வளர்த்து வந்தனர்.

ரயில்வே நிறுவனம் ஆட்குறைப்புச் செய்தபோது டமாவுக்கு அந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக பதவி வழங்கப்பட்டது.

Cat
அத்தோடு பூனையின் தலை அளவிலான தொப்பியும், மாதச் சம்பளம் உணவாகவும் டமாவுக்கு வழங்கப்பட்டது.

டமாவைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கிஷி நகருக்கு வந்தனர். அந்தப் பூனை தொடர்பான பொருட்களும் பெரிய அளவில் விற்கப்பட்டன.

Published by

Leave a comment