சாய்ந்தமருது: முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் தேசிய வீடமைப்பு தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள திரிய பியச வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது 2ம் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.
திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து வீட்டுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டிலும் மக்களின் பங்களிப்புடனும் சாய்ந்தமருதில் ஆறு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment