தொடரும் அவலம்: பெண்ணை கடத்திச் சென்று குளத்துக்குள் வைத்து கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம்

abuse2_1633504c[1]ஆனமடு: ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிகம வெட்டமுறுக்கு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவராவார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தான் சிகிச்சை பெறுவதற்காக கடந்த கிழமை இரவு 7 மணியளவில் ஆண்டிகம பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியரின் சிகிச்சை நிலையத்திற்குச் சென்றிருந்த வேளை தன்னை பலவந்தமாக முச்சக்கர வண்டியில் கடத்திக் கொண்டு சென்ற இருவர் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் ஆனமடு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தான் கடந்த 17ஆம் திகதி தனது நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சிலாபம் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து 19ஆம் திகதி வீடு திரும்பியதாகவும் தனது கணவரின் வற்புறுத்தல் காரணமாகவே தான் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டது தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்வதாகவும் குறித்த பெண் நேற்று ஆனமடு பொலிஸ் நிலையத்தில் செய்த தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் தன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை எனவும், மீண்டும் கண்டால் அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்வபத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

Published by

Leave a comment