‘டைட்டானிக்’ புகழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலி

james titanicகலிஃபோர்னியா: பிரபல ஹொலிவுட் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. டைட்டானிக், அவதார், பிரேவ்ஹார்ட் உள்ளிட்ட மிகப் பிரபலமான படங்களின் இசையமைப்பாளரான ஹார்னர், இரண்டு முறை ஒஸ்கர் விருது வாங்கியவர்.

விமானியாகப் பயிற்சி பெற்றிருந்த ஜேம்ஸ் ஹார்னர், ஒரு சிறிய விமானத்தை தனியாக ,திங்களன்று காலை சாண்டா பார்பராவுக்கு வடக்கே விபத்துக்குள்ளானார்.

james titanic
ஜேம்ஸ் ஹார்னர் (61)

டைட்டானிக் படத்தின் பின்னணி இசைக்காகவும், அப்படத்தில் வரும் ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ என்ற பாடலுக்காகவும் இரண்டு ஒஸ்கர்களை வாங்கிய ஹார்னர், இவையல்லாது வேறு எட்டு முறை ஒஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

Published by

Leave a comment