புதிய அரசாங்த்தில் முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மை கட்சிகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதும் அது எட்டாக்கணியாகவே இருக்கின்றது

ranil maithiriஅபூ அஸ்ஜத் 

கொழும்பு: புதிய அரசாங்த்தில் முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மை கட்சிகளுக்கும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்த போதும் அது எட்டாக்கணியாகவே இருக்கின்றது என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

20 வது தேர்தல் திருத்தம் தொடர்பில் இரட்டை வாக்குப்பதிவு தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தமது கருத்துக்களை முன் வைத்த போதும் அது தொடர்பில் எவ்வித சாதமான பதிலும் கிடைக்காத நிலையில் நேற்றும் ,இன்றும் பல்வேறு சந்திப்புக்கள் இடம் பெற்றுள்ளன.பிரதமர் மற்றும் புதிய அரசாங்கத்தினை அமைக்க முதன்மையாக செயற்பட்டவர் என கூறப்படும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோரை இந்த சிறுபான்மை கட்சிகள் சந்தித்து தமது வலுவான கோறிக்கையினை முன் வைத்துள்ளன.

இருந்த போதும்,ஜக்கிய தேசிய கட்சியின் சில முஸ்லிம் பிரதி நிதிகள் இரட்டை வாக்குமுறை தேவையில்லை என்று கூறிய போதும்,அவர்களின் உள்நோக்கம் சந்தை வியாபாரம் என தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ மூலம் பாராளுமன்றம் சென்று பின்னர் கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினரான ஹூனைஸ் பாருக்,அண்மையில் தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இரட்டை வாக்கு பதிவு தேவையற்றது என்று கூறியதாதனது,இந்த நாட்டில் சிறுபான்மை கட்சிகள் இருக்கவும்,கூடாது தாமும் பாராளுமன்றம் செல்லவும் கூடாது என்ற சுயநலத்துடன் கூடிய அரசியல்செயற்பாடாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிறுபான்மை கட்சிகள் தமது கோறிக்கைகள் உள்ளீர்க்கப்படாவிட்டால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 பாராளுமன்றத்தி் விவாதத்திற்கு வருகின்றது.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் நாளை திங்கட்கிழமை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம் பெறுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன கடும் அதிருப்தியினை 20 தொடர்பில் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment