ஜ.தே.க.அமைப்பார் முஸ்தபாவின் துரித முயற்சியினால் ஆயிரக்கணக்கான பயணிகளின் நீண்டநாள் கணவு நனவாகும் சாத்தியம்
– முகம்மட் சஜி
காத்தான்குடி: பொது மக்களின் மிக நீண்ட நாள் தோவையாக காணப்பட்டதும் பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்த கர்பலா-பாலமுனை பிரதான வீதியின் அபிவிருத்தி வேலைகள் ஜ.தே.க.அமைப்பார் எச்.எம்.எம்.முஸ்தபாவின் துரித முயற்சியினாலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் காசீமுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவும் அமைச்சின்
முதற்கட்ட நிதியான 50 இலட்சம் செலவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவ்வீதிக்கான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எச்.எம்.எம்.முஸ்தபா
காத்தான்குடி ஜ.தே.க.அமைப்பார் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெறும் வைபவத்தில் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே, ஜ.தே.க.தேசிய அமைப்பார் தயாகமகே, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவசாளர் பொறியியலாளர் அப்துர்றஹ்மான், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கி.மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரத்தினம், பிரதம பொறியியலாளர் பத்மராசா உள்ளிட்ட பலரின் பங்குபற்றலுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையினைத் தொடர்ந்து பாலமுனை சந்தியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அதே தினத்தில் இப்தார் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a reply to Mohamed Jameel Cancel reply