ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் காயர் வீதி வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் எம்.வை.எம். சுபைர் (வயது 36) தெரிவித்தார்.
முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உறக்கத்திலிருந்த வேளையில் இத்தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களின் உதவியுடன் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டுள்ளபோதிலும் இத் தீயினால் முச்சக்கர வண்டி முற்றாக எரிந்துள்ளது.
சம்பாவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Published by
![fire[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/fire1.jpg?w=141&h=150)
Leave a comment