மும்பை: கடுமையாகப் பெய்த பருவமழையின் காரணமாக, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை நகரம் ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தாமதமாக இயங்கிவருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் ரயில் சேவைகள் பல ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் ரயில் நிலையங்களிலேயே சிக்கிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதால், பலரும் பேருந்து, ஆட்டோ, கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி பயணம் செய்ய முற்பட்டதாலும், சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் மழையின் காரணமாக, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பையின் பிற நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல பகுதிகளில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published by



Leave a comment