பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு

unp_logo_1[1]கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிடும் எனவும் வேட்புமனு யோசனை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் அதன் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல், சிறிகொத்தவில் நடைபெற்றது.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை அடுத்த சில தினங்களில் எதிர்க்கட்சி திரும்ப பெறும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

Published by

Leave a comment