புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

sainthamaruthu donation– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: புனித ரமழானை முன்னிட்டு சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.

தக்வா முதியோர் சங்கத்தின் தலைவர் ஏ.வீ.மீராசாஹிபு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக பதில் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சாய்ந்தமருது முதியோர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அலியார், தக்வா முதியோர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.சீ. ஆதம்பாவா (ஹலிபா), உப தலைவர் யூ.கே.அஹமட்லெவ்வை உள்ளிட்ட சங்க ஆண், பெண் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

sainthamaruthu donation

இதன்போது சங்க நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட் புனித ரமழானுக்கான பேரீச்சம் பழம் உள்ளிட்ட உலர் உணவு பொதிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் வருடாந்த சிறந்த முதியோர் சங்க தெரிவில் முதலாம் இடத்தினை நான்கு தடவைகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment