வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அனைவரும் துப்பாக்கி வன்முறைகள் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்கிற தமது நிலைப்பாட்டை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய தருணம் வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கிறித்தவ தேவாலயத்தில் வெள்ளை இன துப்பாக்கிதாரி ஒன்பது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை சுட்டுக்கொன்ற மறுநாள் ஒபாமாவின் இந்த அழைப்பு வந்திருக்கிறது.
இந்த கொலைகளை செய்த சந்தேக நபரான இளம் துப்பாக்கிதாரியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தெற்குக் கரோலினாவில் இருக்கும் லெக்சிங்கட்னைச் சேர்ந்த டைலன் ரூஃப், வடகரோலினாவில் இருக்கும் ஷெல்பி என்கிற இடத்தில் வாகனசோதனையின்போது பிடிபட்டதாக, காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
Published by

Leave a comment