நோன்பு 01 தொடக்கம் 19வது இரவு வரை
இஷாத் தொழுகை 08.45 மணிக்கும் இரவுத் தொழுகை 09.00 மணிக்கும் நடைபெறும்.
நோன்பு 20வது இரவு முதல்
இஷாத் தொழுகை சாதாரண நாட்களில் தொழுவது போன்று வழமையான நேரத்திலும் இரவுத் தொழுகை அதிகாலை 02.00 மணிக்கும் நடைபெறும்.
குறிப்பு: பெண்களுக்கான ஐவேளை தொழுகை மற்றும் இரவுத் தொழுகைகள் மேல் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவுத் தொழுகையின் பின்னர் உரை நிகழ்த்துபவர்களும், தலைப்புக்களும்.
றமழான் இரவு
தலைப்புக்கள்
உரைநிகழ்த்துபவர்
1,2,3
நோன்பின் சிறப்புக்களும் நோன்பாளியின் தவறுகளும்
MFM.சிபான் (அஸ்ஹரி)
4,5,6
இன்றைய சூழலில் பெற்றோரின் பொறுப்புக்களும் கடமைகளும்
MCM. றிழ்வான் (மதனி)
7-10
நபி (ஸல்) அவர்களைச் சோதித்த கிருஸ்தவர்கள்
MMM. மன்சூர் (மதனி)
11-12
நவீன ஊடகங்களால் இலக்குவைக்கப்படும் முஸ்லிம் பெண்கள்
SHM. நஷ்மல் (பலாஹி)
13-16
கருத்துவேறுபாடுகளின் போது ஸஹாபாக்களின் அணுகுமுறைகள்
ACM. ஜலீல் (மதனி)
17,18,19
மக்களின் பார்வையில் அற்பமாகக் கருதப்படும் தீமைகள்
M.அஸ்பர் ஹஸன்(பலாஹி)
மாணவர்களுக்கான றமழான்கால விஷேட வகுப்புக்கள்
தரம் 6,7,8,9 ஆம் வகுப்பு ஆண் மாணவர்களுக்கான வகுப்பு
சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 1 மணி நேரம் நடைபெறும்.
தரம் 10 மாணவர்களுக்கு
வியாழக்கிழமைகளில் பி.ப. 5.00 மணி தொடக்கம் இப்தார் நிகழ்வுடன் நிறைவுபெறும்
மாணவிகளுக்கான வகுப்பு
புதன்கிழமைகளில் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 2 மணித்தியாலங்களும்
வியாழக்கிழமைகளில் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 1 மணித்தியாலமும் நடைபெறும்.
பெண்களுக்கான றமழான்கால விஷேட பயான் நிகழ்சிகள்
சனி, திங்கள், புதன் ஆகிய தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் ளுஹர் அதான்வரை நடைபெறும்.
இஃதிகாப் தொடர்பான அறிவித்தல்.
நபி (ஸல்) அவர்களின் தூய ஸுன்னாவை பின்பற்றி றமழான் கால சிறப்பு அமல்களில் ஒன்றான இஃதிகாஃப் வணக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டை இன்ஷா அல்லாஹ் இவ்வருட றமழான் தொடக்கம் இப்பள்ளிவாயலில் மேற்கொள்வதற்கு நிருவாகம் தீர்மாணித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
அல்குர்ஆன் அருளப்பட்ட புனித மாதத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து சிறந்த அமல் இபாதத்துகள் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் எம்மை ஆர்வமூட்டியுள்ளதால் அதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ள றமழான் இறுதி 10 தினங்களில் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ளும் நன்நோக்கில் நோன்பு 20வது இரவு முதல் முழுமையாக பள்ளிவாயலில் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள சகோதரர்கள் 15வது நோன்புக்குள் தங்களது பெயர் விபரங்களை பள்ளிவாயலில் பதிவு செய்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
இப்புனித மாதத்தில் தூய்மையான எண்ணத்துடன் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி எமது அமல், இபாதத்துகளை அமைத்துக் கொள்வதனூடாக சுவனத்தை அடைந்து கொள்வோமாக!

Leave a comment