லண்டன்: இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணித்தியாலங்கள் அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர்.
அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணித்தியாலங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர்.
இந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் 18 அல்லது 19 மணித்தியாலங்கள் நோன்பு நோற்கின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாலை 4 மணியிலிருந்து மாலை 7 மணிவரை சராசரியாக நோன்பு நோற்கின்றனர். இதனடிப்படையில் 15 மணித்தியாலங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் நோன்பு நோற்கின்றனர்.
Published by
![crescent-moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/crescent-moon1.jpg?w=150&h=113)
Leave a comment