“நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைப்பு”

parliamentகொழும்பு: நாடாளுமன்றம் ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவு கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர்களும் அமைச்சர்களுமான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தலைவர் என்ற முறையில்

தானும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடியபோதே அவர் இதைக் கூறியதாக மனோ கணேசன் கூறுகிறார்.

நடப்பு நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார் என ரணில் விக்ரமசிங்க தமது குழுவினரிடம் தெரிவித்தார் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment