காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்

museum– எம் எச் எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ,முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ் எச் அஸ்பரின் வேண்டுகோளின் பேரில் தாம் வருகை தந்துள்ளதாகவும் அவற்றினை பார்வையிடவே தாம் வருகை தந்துள்ளதாகவும்

நாளை இடம்பெறவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூட்டத்தின்போது இதை சமர்ப்பித்து ஒரு காத்திரமான முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகவும் பத்வா குழு உலமா பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

museum

முன்னாள் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் அயராத முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட பூர்வீக நூதனசாலையானது சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் பலதரப்பாலும் எழுப்பப்பட்டிருந்தன.

museum1

இதன் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு அவர்கள் எதை எடுக்கச்சொல்கிறார்களோ அல்லது எதை நீக்கச்சொல்கிறார்களோ அது நீக்கப்படும் என முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்திருந்தார்.

museum2

பல நூற்றாண்டுகாலமாக முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு அரும் பங்காற்றியுள்ளனர். அது இன்று மறைக்கப்படுகிறது. பர்மா நாட்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டதுடன் அவர்களின் நிலைமை எமது முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடாது என்ற நோக்கிலும் பல்வேறு இனவாத சக்திகளுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினை நாடி மாத்திரமே இதை செய்ததாகவும் நாம் மரணித்தாலும் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். இதை நீங்கள் சமர்ப்பித்து சரியான முடிவொன்றை எடுக்குமாறு எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இந்த சந்திப்பின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment