6 மாதங்களில் 100 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ள சவுதி!!

saudi– AF-90

ரியாத்: இந்த ஆண்டில் நூறாவது நபரின் தலையை துண்டித்து சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் சவுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த நபர் ஆகியோரின் தலையை துண்டித்ததன் மூலம் கடந்த ஆறே மாதங்களில் நூறு பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா.

சவுதி அரேபியா நாட்டில் கொலை, பாலியல், பலாத்காரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில், சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் சிரியாவை சேர்ந்த இஸ்மாயில் அல் தவ்ம் மற்றும் சவுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த ராமி அல் கால்டி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.இருவருக்கும் சவுதியில் நேற்று (திங்கட்கிழமை) தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.அந்த சாதனையை இந்த ஆண்டு சவுதி மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment