காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

fajr– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல் பஜ்ர் காரியாலயத்தில் தலைவர் அலஹாஜ் எஸ் ஏ கே பழீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.

அல் கிம்மா நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 75 குடும்பங்களுக்கு இவ்வுலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேற்படி நிகழ்வுக்கு ஓட்டமாவடி அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம் எஸ் எஸ் ஹாறுன் ஸஹ்வி உட்பட சவூதி அரேபிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு உலருணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.

fajr

பல்வேறு சமூக சமய கல்விப்பணிகளில் ஈடுபட்டுவரும் காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பானது, அதன் ஓர் சிறு முயற்சியாக இந்நிகழ்வு இடம்பெற்றதாகவும் இலவச ஜனாஸா கொண்டுவருதல் மற்றும் வறிய மக்களுக்கான பொருளாதார உதவிகளை வழங்கி வைத்தல் போன்ற பணிகளை செய்து வருவதாகவும் அதன் தலைவர் அலஹாஜ் எஸ் ஏ கே பழீலுர் ரஹ்மான் இதன்போது தெரிவித்தார்.

al fajr

Published by

Leave a comment