மட்டக்களப்பு: மட்டக்களப்பு WinSYS Networks நிறுவனத்தில் கல்விகற்று அமெரிக்காவின் MCP நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட MCSA மற்றும் Network Engineering பரீட்சை மற்றும் Network Engineering துறையில் சித்தியடைந்த கிழக்கு மாகாண மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா 14.06.2015 மாலை 2.30 மணியளவில் Hotel East Lagoon இல் மட்டக்களப்பு முகாமையாளர் திரு.ம.விக்னராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக WinSYS Networks நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ஷியாம் ஆப்தீன் அவர்களும், மட்டக்களப்பு கல்லியியல் உப பீடாதிபதி திருமதி.தி.யுவனேஸ்வரி அவர்களும், மட்டக்களப்பு வர்தகசங்க மற்றும் வர்த்தக சம்மேளன தலைவரான திரு.மு.செல்வராஜா அவர்களும் மற்றும் WinSYS Networks நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி திரு.நிப்ராஸ் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வானது கிழக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும்.
இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து WinSYS Networks மற்றும் Network Engineering பரீட்சைக்கு தோற்றிய சுமார் 40 மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் என்பன வழங்கப்பட்டது.
Published by



Leave a comment