பாலமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் மாபில் கற்கள் அன்பளிப்பு

hizbullah palamunaiஏ.எல். டீன்பைரூஸ்

பாலமுனை: ஆரயம்பதி பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பதினைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மாபில்கள் கையளிக்கும் நிகழ்வு (15.06.2015 திங்கள்) மஃரிப் தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தலைமையில் இடம் பெற்றது.

காத்தான்குடி பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் வரலாறு மிகப் பெரியது என்பதுடன் இன்று இப்பள்ளிவாயல் இவ்வளவு பெரிதாக கட்டப்படுவதற்கு பல நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவிகள் எமக்கு கிடைக்கப் பெற்றன என பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.

hizbullah palamunai

மேலும் எமது பள்ளிவாயலுக்கு பல்வேறு தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன. எனவே எமக்கு முடியுமான அளவு உதவி செய்யுங்கள் என நாம் எமது பள்ளிவாயலுக்கு வந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தோம்.

ஆனால் அவர்களில் யாரும் இன்று வரை எமது பள்ளிவாயலுக்கு உதவ முன்வரவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் எமது அவசிய தேவையான மாபில் விடயத்தை முன்வைத்த போது எந்த மறுப்பின்றி, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாபில்களை உடனேயே எமக்கு வழங்கி இருக்கின்றார். .

marble

கடந்த சுனாமி காலப்பகுதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா எமது பாலமுனை மக்களுக்கு பல்வேறு பட்ட உதவிகளை செய்துள்ளார் எனவும் பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது உரையில்,

இறைவன் எமக்களித்த சந்தர்பங்களை பயன்படுத்தி இவ்வாறான பணிகளை நாம் செய்து வருகின்றோம் பள்ளிவாயல் உள்பகுதி மாபில் அமைக்க சுமார் 13 இலட்சம் ரூபாய் தேவை என இப்பள்ளிவாயல நிர்வாகிகள் எம்மிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை விடவும் மேலாக சுமார் 15 லட்சம் ரூபாய் தேவை என நாம் அறிந்த போது நாம் அதற்கான முயற்சி எடுத்தோம். அதன் பலனாக பாத்திமா ஒஸ்மான் பௌண்டேசன் மூலம் டுபாய் நாட்டை சேர்ந்த ஒஸ்மான சித்தீக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உவியுடன் சுமார் 13 இலட்சம் ரூபாய் கிடைத்தது.

எங்களினூடாக 2 இலட்சம் ரூபாயும் போட்டு மொத்தமாக 15 இலட்சம் ரூபாயினை இப்பள்ளிவாயலுக்கு கொடுக்கக் கூடிய சந்தர்பத்தினை அல்லாஹ் எமக்களித்தான்.

இந்நிகழ்வின் போது பள்ளிவாயல் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், மேற்படி மாபில்களை பள்ளி நிர்வாகிகளிடம் உத்தியபூர்மாக கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

Published by

Leave a comment